இரட்டை கோபுர தாக்குதல் – வினோத வடிவத்தில் விமானத்தை இயக்கிய கலிபோர்னியா விமானி: வைரலாகும் புகைப்படம்!!

0

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்த விமானி ஒருவர்  NEVER FORGET என்ற வடிவத்தில் விமானத்தை இயக்கி சாகசம் செய்துள்ளார்.

வினோத வடிவம்:

கடந்த 2011ம் ஆண்டு அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.  இந்த கொடூர தாக்குதலில் மொத்தம் 2997 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். மேலும், அமெரிக்காவை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு அல்கொய்தா இயக்கத்தின் தீவிரவாத தலைவன் ஓசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவத்தின் 20ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில்  கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மவுன  அஞ்சலி செலுத்தினார். அது மட்டுமல்லாமல், அன்று களத்தில் போராடியவர்களை நினைத்து அமெரிக்கா பெருமிதம் கொள்வதாகவும் வெறும் 102 நிமிடங்களில் 2997 பேரது கனவு சிதைந்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

இது மட்டுமல்லாமல், கலிபோர்னியாவை சேர்ந்த விமானி ஒருவர் விமானத்தை வினோத வடிவத்தில் இயக்கி சாதனை புரிந்துள்ளார்.  அதாவது, இதன் 20 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விமானத்தை NEVER FORGET அதாவது, ” ஒருபோதும் மறப்பதில்லை” என்ற வடிவத்தில் விமானத்தை இயக்கி புது சாதனையை நிகழ்த்தினார்.  இதற்காக, சுமார் இரண்டரை மணி நேரம் விமானத்தை இயக்கியதாக தெரிவித்தார்.  இந்த சாதனை மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here