ஆட்டை வெட்டி ரத்த அபிஷேகம் – சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மீது புகார்!!

0

கோலிவுட்டில் நம்பர் 1 நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவரின் ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்னரும் ரசிகர்கள் தவமாய் தவம் கிடப்பர். அந்த வகையில் புதிதாக வெளிவர இருக்கும் படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் நவம்பர் மாதத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். இதனுடைய மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. இந்நிலையில் ரசிகர்கள் பொது இடத்தில் ஆட்டை வெட்டி அண்ணாத்த பட போஸ்டருக்கு கொடூரமாக ரத்த அபிஷேகம் செய்து உள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்து இருப்பதாவது, சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக அரங்கேறியது. இது அனைவரின் மனதையும் பாதிக்கும் வண்ணம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலுக்கு ரஜினிகாந்த் இதுவரை எதிர்ப்போ, கணடமோ, விளக்கமோ கொடுக்கவில்லை. இதனால் இதை செய்தவர்கள் அதாவது இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், நடிகர் ரஜினிகாந்த் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here