இந்திய பொதுநல சேவகர் டிராபிக் ராமசாமி மரணம் – அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

0

மிக முக்கிய பொது நல சேவகராக திகழ்ந்த டிராபிக் ராமசாமி நேற்று(மே 4)கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

டிராபிக் ராமசாமி:

இந்தியாவில் மிக புகழ்பெற்ற இந்திய பொதுநல சேவகராக திகழ்ந்தார் டிராபிக் ராமசாமி. இவர் சாலைகளில் ஏதும் போக்குவரத்து பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே களத்தில் புகுந்து அதனை சரி செய்து விடுவார். இதன் காரணமாகவே இவருக்கு டிராபிக் ராமாசாமி என்று பெயர் வந்தது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு பொதுநல வழக்குகளை தொடர்ந்து பல நல்ல செயல்களை செய்தவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சில வழக்குகளில் இவர் வழக்கறிஞர் உதவியின்றி தானே வாதாடும் நடைமுறையும் மேற்கொண்டு வந்தார். தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் டிராபிக் ராமசாமி மார்ச் மாத இறுதியில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார்.

இந்தியாவில் மேலும் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை திடுக் தகவல்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனேவே அவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு மூச்சு விடுவதற்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. இருந்தும் அவரது உடல் நிலை மிகுந்த கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் அவர் மே 4ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவருக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here