மூன்றாவது முறையாக மம்தா முதல்வராக இன்று பதவி ஏற்பு – குவியும் வாழ்த்துக்கள்!!

0

திரிணாமுல்காங்கிரஸ் தலைவரும் இரும்பு பெண்மணியுமான மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி அடைந்து மேற்கு வங்க முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். அதிகபடியான இடங்களை வென்று அசுரபலத்துடன் வலம் வருகிறது திரிணாமுல் காங்கிரஸ் .

பெரும்பான்மையான வெற்றி :

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலில் பா.ஜா.கா வை எதிர்த்து பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கொடியை நாட்டி வலம் வருகிறது திரிணாமுல் காங்கிரஸ். ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ கள் 148 . ஆனால் 292 தொகுதிகளில் 200 கும் மேற்பட்ட (213) தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளுமையான வெற்றியை அடைந்துள்ளது.

நடிகர் வடிவேலுவின் மகனா இது?? எவ்வளோ அழகா இருக்காங்கனு பாருங்களே!!

ஆனால் மம்தா பானர்ஜி போட்டியிட்ட தொகுதியான நந்திகிராம் தொகுதியில் வெறும் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். எம்எல்ஏ ஆகாமல் முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதங்கள் செயல்படலாம் என்பதால் பதவி ஏற்று 6 மாத காலத்துக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனைக்கு தள்ளப்பட்டார் மம்தா பானர்ஜி.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் நந்திகிராம் தொகுதியில் தேர்தல் முடிவு குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார்.மேலும் மம்தா பானர்ஜி அவர்கள் ஆளுநர் தனகரை அவரது மாளிகையில் சந்தித்து மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.5ம் தேதியான இன்று முதல்வராக இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் மம்தா பானர்ஜி முதல்வர் பதவி ஏற்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறை வெற்றி அடைந்ததை கொண்டாடுகிறார்கள் கட்சியினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here