தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது, அடுத்த மூன்று நாட்களுக்கு (மே 13,14,15) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/06/weatther-22.jpg)
மேலும் மே 14 முதல் மே 16 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவ கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இன்று (ஜூன் 13) முதல் ஜூன் 17ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட காதலன் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்!!