ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,080 க்கு விற்பனை – சென்னையில் ஒரு ரூபாய் அதிகரிப்பு!!

0
gold rate hike in chennai
gold rate hike in chennai

அமெரிக்க தேர்தல் நடப்பதால், தங்கத்தின் விலையில் அடுத்தடுத்த நாட்களில் மாற்றம் ஏற்படலாம். இன்று சென்னையில், ஒரு கிராம் ஒரு ரூபாய் கூடி, சவரன் ரூ. 38,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாற்றம் வரலாம்

தீபாவளி மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக, மக்கள் நாள் தோறும் தங்கத்தின் விலையை ஆர்வமுடன் பார்க்கின்றனர். அமெரிக்கா அதிபர் தேர்தல் நடப்பதால், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படலாம். அதே நேரம் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை (22 காரட் ) ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ. 4,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம் ), ரூ. 38,080 ஆக விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக நாள் தோறும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதிகபட்சமாக, அக்டோபர் 31ம் தேதி, ரூ.25 கூடியது. குறைந்தபட்சமாக அக்டோபர் 29ல், ரூ. 32 குறைந்தது. சில்லறை வர்த்தகத்தில், வெள்ளி ஒரு கிராம் ரூ. 66.20 ஆக (0.30 பைசா கூடுதல் ) விற்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here