TNPSC தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற முக்கிய பொது அறிவு வினாக்கள்.., தவறாம பாருங்க!!!

0
TNPSC தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற முக்கிய பொது அறிவு வினாக்கள்.., தவறாம பாருங்க!!!
TNPSC தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற முக்கிய பொது அறிவு வினாக்கள்.., தவறாம பாருங்க!!!
TNPSC தேர்வுக்கு அனைவரும் தயாராகி வரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட முக்கிய பொது வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

1 .கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் உயிருள்ள செல்?

அ) ஸ்கிளிரன்கைமா

ஆ) பாரன்கைமா

இ) ஸ்கிளிரைடுகள்

ஈ) நார்கள்

2.எளிதில் ஆவியாகும் தன்மையுடைய வாயு வடிவ தாவர ஹார்மோன்?

அ) ஆக்ஸின்

ஆ) ஜிப்ரலின்

இ) எத்திலீன்

ஈ) ABA

3.1857- முதல் இந்திய சுதந்திரப்போர் எந்த கவர்னரின் காலத்தில் நடைபெற்றது?

அ) கானிங் பிரபு

ஆ) பெண்டிங் பிரபு

இ) டல்ஹௌசி பிரபு

ஈ) கர்சன்

4.மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என இந்திய அரசியலமைப்பில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது ?

அ) அடிப்படை உரிமைகள்

ஆ) அடிப்படை கடமைகள்

இ) முகவுரை

ஈ) அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்

5.( RGGVY) ராஜீவ் காந்தி கிராமின் வித்யுகரன் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு?

அ)1978

ஆ) 2005

இ) 2015

ஈ) 1999

6.சங்க காலத்தில் பரத்தையர் என்ற சொல் கீழ்க்கண்ட தொழிலைக் குறிக்கிறது.

அ) விலைமாதர்

ஆ) வாணிபம்

இ) மீன்பிடித்தல்

ஈ) விவசாயிகள்

7.வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர்?

அ) இராபர்ட் கிளைவ்

ஆ) சர் – அயர் – கூட்

இ) கவுண்ட்-டி-லாலி

ஈ) டியூப்ளே

8.இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்திற்கு தலைமையேற்றவர்?

அ) டாக்டர். இராஜேந்திர பிரசாத்

ஆ) டாக்டர்.சச்சிதானந்த சின்ஹா

இ) ஜவஹர்லால் நேரு

ஈ) டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்

9.கி.பி. 1398 ஆம் ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தவர் கீழ்க்கண்டவற்றில் யார்?

அ) செங்கிஸ்கான்

ஆ) பாபர்

இ) நாதிர் ஷா

ஈ) தைமூர்

10.மனிதவள மேம்பாடு கீழ்க்கண்டவற்றில் தொடர்புடையது எது?

அ) வேளாண்மை தொழில்

ஆ) வங்கி மற்றும் நிதி

இ) கல்வி மற்றும் சுகாதாரம்

ஈ) வணிகம் மற்றும் பணம்

இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்கள், தினசரி நடப்பு நிகழ்வுகளையும், பிரபல Examsdaily நிறுவனம் அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு ரூ. 7500 மதிப்பில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு,

Call us at 8101234234

விடைகள்:
1.ஆ) பாரன்கைமா
2.இ) எத்திலீன்
3.அ) கானிங் பிரபு
4.இ) முகவுரை
5.ஆ) 2005
6.அ) விலைமாதர்
7.ஆ) சர் – அயர் – கூட்
8.ஆ) டாக்டர்.சச்சிதானந்த சின்ஹா
9.ஈ) தைமூர்
10.இ) கல்வி மற்றும் சுகாதாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here