TNEB 1300 மின் கணக்கீட்டாளர்களுக்கான தேர்வு ஆங்கிலத்திலா..? தமிழிலா..? அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

0
TNEB
TNEB

தமிழநாடு மின்சார வாரியம் நடத்தும் 1300 மின் கணக்கீட்டாளர் மற்றும் 500 இளநிலை உதவியாளர்களுக்கான தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இதற்கான புதிய அறிவிப்பை அமைச்சர் தங்கமணி வெளியிட்டு உள்ளார்.

எந்த மொழியில் நடைபெறும்..?

TNEB தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட உள்ளன. இதில் 20 வினாக்கள் தமிழ் மொழியில் இருந்தும் மீதமுள்ள 80 வினாக்கள் ஆங்கிலத்திலும் மட்டும் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

TNEB நடத்தும் 500 இளநிலை உதவியாளர் மற்றும் 1300 மின்கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வினை ஆங்கிலத்தில் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்த நிலையில் அந்த தேர்வு தமிழில் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் பெறப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here