தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!!!

0
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!!!

தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை போட்டிதேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை TN TRB அண்மையில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வருகிற 2024 ஜனவரி 7ஆம் தேதி தேர்வு நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறி ஹால் டிக்கெட்டும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் தேர்வுக்கு ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சில பகுதிகளில் மக்கள் இதுவரையிலும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக  தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

SSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., தேர்ச்சி பெற இது ரொம்ப கட்டாயம்? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here