தமிழக மக்களுக்கு ஜாக்பாட்., வெறும் ரூ. 300 போதும்! அரசு பஸ்ல ஒரு நாள் Full ஆ ஊர் சுத்தலாம்!!

0
தமிழக மகளிருக்கான இலவச பேருந்து ரத்து.., கண்டனம் தெரிவித்த எடப்பாடி!!
தமிழக மகளிருக்கான இலவச பேருந்து ரத்து.., கண்டனம் தெரிவித்த எடப்பாடி!!

தமிழக போக்குவரத்து துறை மூலம், ரூபாய் 300 கட்டணத்தில் அரசு பஸ் வாயிலாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை குழுவாக பார்க்க, அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

அரசு அதிரடி :

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்க முடியாதவர்கள், அதிக கட்டணம் செலுத்த முடியாதவர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அரசு பஸ்ஸை வாடகைக்கு எடுக்கலாம். தற்போது இதனை மேலும் விரிவு படுத்தும் விதமாக, போக்குவரத்து துறை சூப்பர் திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது, நாகை மண்டலம் சார்பாக, கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க ஏதுவாக சூப்பர் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

50 நபர்கள் குழுவாக சேரும் பட்சத்தில் நபருக்கு ரூபாய் 300 வீதம், காலை 7:00 மணி முதல் இரவு 7 மணி வரை பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டு அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார். இதற்காக, பயணிகள் முறையாக முன் பதிவு செய்தாலே போதுமானது.

கிடப்பில் இருந்த படத்தை தூசி தட்டும் சுந்தர்.சி.., ஹீரோவாக நடிக்க போறது இந்த Flop ஹீரோவா?

முதற்கட்டமாக குமரி மாவட்டத்தில் தொடங்கப்படும் இத்திட்டம், அடுத்தடுத்த மாவட்டத்துக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. விரும்பும் நபர்கள், போக்குவரத்து கிளை மேலாளரைத் தொடர்பு கொண்டு இது குறித்த கூடுதல் விவரங்களை பெறலாம். இத்திட்டத்துக்கு தற்போது ஆதரவு குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here