தமிழக தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்போது வழங்கப்படும்?? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்போது வழங்கப்படும்?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு காலியாக இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பப்பட்டு இருந்தன. இந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் 15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இவர்களுக்கு எப்போதும் ஒவ்வொரு மாதமும் சம்பளம் தாமதமாகவே வருகிறது என்ற புகாரும் உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், சில மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தாற்காலிக ஆசிரியர்கள் நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, உயர்நிலை பள்ளிகளில் 435, மேல்நிலை பள்ளிகளில் 670 என மொத்தமாக 1105 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படமால் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களே., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு? ஜாக்பாட் தகவல்!!!

இதனை குறித்து, ஓ. பன்னீர்செல்வம் தற்காலிக ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை உடனுக்குடன் வழங்கவும், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அறிவுரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here