தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.,, கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.,, கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.,, கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி ஊக்கத் தொகையை பெற விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆட்சியர் அறிக்கை:

மத்திய அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும். 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்கள் மற்றும் தொழில்/ தொழில்நுட்ப கல்வி பயில்பவர்கள் போன்றவர்களுக்கு பெற்றோர்கள் ஆண்டு வருமான அடிப்படையில் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ்,மாணவர்களின் பேங்க் அக்கவுண்டுக்கு நேரடியாக ஊக்க தொகை செலுத்தப்படும். இதன் அடிப்படையில் 2022-23 கல்வியாண்டில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணாக்கர்கள், கல்வி ஊக்க தொகையை பெற அக்டோபர் 31ம் தேதி வரை www.scholarship.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் மாணாக்கர்கள் கல்வி ஊக்க தொகையை பெற வேண்டும் என்றால் பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் . இதுமட்டுமல்லாமல் இன்கம் சர்டிபிகேட், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ, சிறுபான்மையினர் என்பதற்கு சர்டிபிகேட், ஆதார் நம்பர், அக்கவுண்ட் நம்பர் ஆகிய முக்கிய ஆவணங்கள் கட்டாயம் ஆகும். மேலும் இத்திட்டம் தொடர்பாக விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here