தமிழகத்தில் ரெட் அலர்ட் திடீர் வாபஸ்.,என்ன காரணம் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!!

0
தமிழகத்தில் ரெட் அலர்ட் திடீர் வாபஸ்.,என்ன காரணம் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!!
தமிழகத்தில் ரெட் அலர்ட் திடீர் வாபஸ்.,என்ன காரணம் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!!

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை, திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீர் வாபஸ் :

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை, குவிக்கப்பட்டு மீட்பு பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதுபோக, தொடரும் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களுக்கு, ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு நிற மழை எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் திடீரென, இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய சேவை திடீர் நிறுத்தம்.,எலான் மஸ்க்கின் அடுத்த பிளான் இதுதான்?

இது குறித்து விளக்கம் அளித்த வானிலை ஆய்வு மையம், நிர்வாக காரணங்களுக்காக இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக விளக்கம் அளித்தது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது போக, வட தமிழகத்தை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருவதால் டெல்டா உள்ளிட்ட உள் தமிழக மாவட்டங்களில், மழையின் தீவிரம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here