தமிழக குடும்ப அட்டைதார்களுக்கு சர்ப்ரைஸ் – மீண்டும் நடைமுறைக்கு வரும் அதிரடி திட்டம்! அதிகாரிகள் உத்தரவு!!

0
தமிழக குடும்ப அட்டைதார்களுக்கு சர்ப்ரைஸ் - மீண்டும் நடைமுறைக்கு வரும் அதிரடி திட்டம்! அதிகாரிகள் உத்தரவு!!
தமிழக குடும்ப அட்டைதார்களுக்கு சர்ப்ரைஸ் - மீண்டும் நடைமுறைக்கு வரும் அதிரடி திட்டம்! அதிகாரிகள் உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம், இனி வழக்கம் போல் செயல்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதிகாரிகள் உத்தரவு:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், உணவு வழங்கல் துறையின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் பெறுவதோடு மட்டுமல்லாது, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் குடும்ப அட்டை முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் அட்டையில் ஏற்படும் பிழைகளை திருத்துவதற்கும், ரேஷன் பொருட்கள் பெறுவதில் ஏற்படும் குறைகளை போக்குவதற்கும் பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த முகாம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது, வைரஸ் பரவல் குறைந்து வருவதால், இந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமை ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை நடத்த வருவாய்த்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மாவட்ட தாசில்தார் அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என  அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here