தமிழகத்தில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்?? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதை யொட்டி ஜனவரி 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதலே வெளியூரில் உள்ள பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர். இதனால், ஏற்பட இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தமிழக போக்குவரத்து கழகம் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 16,932 சிறப்பு பஸ்கள் பேருந்துகளை வரும் 12ம் தேதி முதல் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு, அகவிலைப்படி உட்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை (ஜனவரி 9) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பேருந்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதில், 2 கோரிக்கைகளை ஏற்பதாகவும், மற்றவைகளை குறித்து பொங்கலுக்கு பிறகு ஆலோசிப்போம் என இன்று (ஜனவரி 8) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போராட்டம் கட்டாயம் நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளதால், தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை முதல் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here