தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு பரிசு கட்டாயம் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு பரிசு கட்டாயம் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு, இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம்  நிச்சயம் செயல்படுத்தப்படும் என, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உறுதி:

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். கடந்த, 1983 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த திட்டம், தொடர்ந்து தற்போது வரை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி சேலையுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு, இந்த திட்டம் கைவிடப்படுவதாக  ஒரு வதந்தி கிளம்பியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்து விளக்கம் அளித்த  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, இந்தத் திட்டம் கைவிடப்படும் என்ற  வதந்தி முற்றிலும் தவறு என்றும், தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்தார். மேலும், இந்த திட்டத்தின் வாயிலாக நலிவுற்றிருக்கும் கைத்தறி மற்றும் விசைத்தறி  நெசவாளர்கள் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

அரசின், இந்தத் திட்டத்தால் 3.59 கோடி மக்கள் பயன்பெறுவர் என்றும், இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், இலவச வேட்டி சேலை தொடர்ந்து வழங்கப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here