வெள்ள நிவாரணம் இவங்களுக்கு மட்டும் தான்…, தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

0
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6000-ஐ நிவாரணத் தொகையை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. இதில் குறிப்பாக, சென்னையில் அனைத்து மக்களுக்கும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதி வாழ் மக்களுக்கும் ரூ. 6000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ள நிவாரணம் வழங்கப்பட உள்ள பகுதிகள் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரைப்படி இந்த நிவாரணம் பின்வருமாறு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,

சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்களுக்கும்.

செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாக மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம்: குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.

திருவள்ளூர் மாவட்டம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here