தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்கத்தின் புதிய இயக்குனர் நியமனம் – கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கை!!

0
தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்கத்தின் புதிய இயக்குனர் நியமனம் - கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கை!!
தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்கத்தின் புதிய இயக்குனர் நியமனம் - கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கை!!

தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் என்பவர் நியமிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கை வெளியீடு :

தமிழகத்தில் தீபாவளி விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, அரையாண்டு தேர்வுக்கான பாடங்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஒரு சில மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் குறித்த முடிவுகளை, அரசினால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதே போல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, இயக்குனர்கள் அரசின் சார்பாக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இதுவரை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனராக கருப்பசாமி என்பவர் பதவி வகித்து வந்தார். வயது மூப்பு காரணமாக, அக்டோபர் 30ஆம் தேதியான நேற்றுடன் அவருக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டது.

தமிழக மாணவர்கள் கவனத்திற்கு., அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட தமிழக கல்வித்துறை, திரு. அ. கருப்பசாமி அவர்களுக்கு பணி ஓய்வு வழங்குவதாகவும், காலியாக உள்ள அந்த பணியிடத்துக்கு முனைவர் எஸ். நாகராஜ முருகன், கூடுதல் உதவி திட்ட இயக்குனர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்களை நியமிப்பதாகவும் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனி வரும் காலங்களில், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்கத்தின் இயக்குனராக அவர் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here