ஆகாயத்தில் பறந்த ஸ்கோர் அப்டேட்.., உணர்வுபூர்வமான நடவடிக்கையால் நெகிழ்ந்த ரசிகர்கள்!!

0
ஆகாயத்தில் பறந்த ஸ்கோர் அப்டேட்.., உணர்வுபூர்வமான நடவடிக்கையால் நெகிழ்ந்த ரசிகர்கள்!!
ஆகாயத்தில் பறந்த ஸ்கோர் அப்டேட்.., உணர்வுபூர்வமான நடவடிக்கையால் நெகிழ்ந்த ரசிகர்கள்!!

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள பயணி ஒருவர் செய்த செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்:

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி தடுமாறியது. ஆனால், சூர்யகுமார் மட்டும் நிலைத்து நின்று விளையாட, இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எளிதான இந்த இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 19.4 ஓவரில் 137 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த பரபரப்பான ஆட்டத்தின் நிலவரத்தை விமானத்தில் பயணம் செய்ய கூடிய ஒருவர் அறிவதற்கு ஆவலுடன் இருந்துள்ளார். ஆனால், விமானத்தில் பயணிகளுக்கு மொபைல் ஃபோன் போன்ற எலெட்ரிக்கல் பொருட்களை உபயோகப்படுத்த அனுமதி இல்லை.

சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்…, நியூசிலாந்துக்கு எதிராக சாதிப்பாரா??

இதனால், கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள அந்த பயணி விமானியிடம் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஸ்கோர் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த விமானி, டிஸ்சு பேப்பரில் IND 133/9, SA 33/03 என எழுதி பயணியிடம் அனுப்பியுள்ளார். இந்த உணர்வுபூர்வமான செயலானது, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here