பிக் பாஸ் 6 : என்னையும் இப்படி தடுங்க மகேஸ்வரி., அண்மையில் வெளியேறிய அசல் கோளாறு சில்மிஷங்கள்!!

0
பிக் பாஸ் 6 : என்னையும் இப்படி தடுங்க மகேஸ்வரி., அண்மையில் வெளியேறிய அசல் கோளாறு சில்மிஷங்கள்!!
பிக் பாஸ் 6 : என்னையும் இப்படி தடுங்க மகேஸ்வரி., அண்மையில் வெளியேறிய அசல் கோளாறு சில்மிஷங்கள்!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் வெளியேறிய அசல் கோளாறு செய்த, கேவலமான லீலைகள் குறித்த ஒரு பதிவு போட்டோவுடன் வெளியாகி உள்ளது.

வைரல் பதிவு:

ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் வார எலிமினேஷனில் மெட்டி ஒலி சாந்தி வெளியேற்றப்பட்டார். சென்ற வாரத்துக்கான, ஓட்டிங் பிராசஸில் குறைவான வாக்குகளை பெற்று அசல் கோளாறு வெளியேறினார். அவர் வீட்டில் இருந்தவரை பெண்களிடம் அநாகரீகமாக, நடந்து கொண்டதாக ரசிகர்கள் பலரும் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், பிக் பாஸ் வீட்டில் நீயும் பொம்மை நானும் பொம்மை 2.0 என்ற டாஸ்க் நடத்தப்பட்டபோது, போட்டியாளர்கள் சக ஹவுஸ் மேட்டுகளை, பொம்மைகளை வைக்க விடாமல் தடுக்கலாம் என உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அப்போது விக்ரமை, எப்படி தடுப்பேன் என்று மகேஸ்வரி செய்து காண்பித்துக் கொண்டிருந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்.., ஷாக்கில் சின்னத்திரை!!

அந்த நேரத்தில் அங்கிருந்த அசல் கோளாறு, ப்ளீஸ் என்னையும் அந்த மாதிரி தடுங்க, நல்லா இருக்கும் என பச்சையாக வழிந்தார். இதை இப்போது, குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் இப்படி கேவலமா பண்றதுனால தான், மக்கள் எல்லோரும் ஓட்டு போட்டு உங்களை வெளியே கொண்டு வந்திருக்காங்க என அசலுக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்த போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here