தமிழக மாணவர்கள் கவனத்திற்கு., அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு., அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு., அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில், 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள், நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வுகள் இயக்கம் :

தமிழகத்தில், குறிப்பிட்ட சில காரணங்களால் பள்ளிப் படிப்பை கைவிட்டு, மீண்டும் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் பொது தேர்வுகளை நடத்தி வருகிறது. இவர்களுக்கென்று, தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு எழுதும் மையம் ஆகியவற்றை தயார் செய்து கல்வித்துறை இந்த தேர்வை நடத்தி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொது தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் நவம்பர் 2ஆம் தேதி, அதாவது நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரூ.20 லட்சம் வரை மகளிர் சுய உதவி குழு கடன் – கூட்டுறவு துறை அமைச்சர் திட்டவட்டம்!!

தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, தங்களின் தேர்வு பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, இந்த தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here