தமிழகத்தில் நடந்த ஷாக் நியூஸ்.. ஒரு லட்சத்தை  நெருங்கிய மின் கட்டணம் – அதிகாரிகள் பகீர் விளக்கம்!!

0
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம்  இன்று முதல் அமல் - மின்சார வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், மலை கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி வீட்டு மின் கட்டணம் ரூ.94,985 என, எனக் குறுஞ்செய்தி வந்ததால் மொத்த குடும்பமும் அதிர்ந்துள்ளது.

அதிர்ந்து போன குடும்பம்:

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியின், மல்குத்திப்புரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா.  இவர் தனது மலை கிராமத்தில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளார். மாதம் தோறும் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தி வந்ததால் இதுவரை மின் கட்டணம் செலுத்தியதில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், இவரது செல்போனுக்கு மின் கட்டணம் ரூ.94, 985 செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கூலி தொழிலாளி, மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டார். மின்சார மீட்டர் கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், தவறான குறுஞ்செய்தி வந்ததாக மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கூலித்தொழிலாளி வீட்டு மின் கட்டணம் ஒரு லட்சத்தை நெருங்கியதாக, குறுஞ்செய்தி வந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here