தாறுமாறு தான்.. சேஸிங் கிங் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்.., இரட்டிப்பு சந்தோசத்தில் இலங்கை அணி!!

0
தாறுமாறு தான்.. சேஸிங் கிங் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்.., இரட்டிப்பு சந்தோசத்தில் இலங்கை அணி!!
தாறுமாறு தான்.. சேஸிங் கிங் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்.., இரட்டிப்பு சந்தோசத்தில் இலங்கை அணி!!

இலங்கை அணியின் கேப்டன் ஆன தசுன் சனகா பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இறுதி ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெறுவார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இலங்கை கேப்டன்!!

ஆசிய கோப்பை தொடர் ஆரம்பத்தில் இலங்கை அணி ஒரு சில சறுக்கல்களை சந்தித்தாலும், சூப்பர் 4 சுற்றில், இந்தியாவுடன் விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த தொடர் வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதையடுத்து இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதற்கு முன்னர் நடைபெற்ற ஆசிய கோப்பை வரலாற்றில் இலங்கை அணி ஐந்து முறை பட்டத்தை வென்றுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் ஆன தசுன் சனகா இன்று தனது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவரது தலைமையிலான இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததை அடுத்து, இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இரட்டிப்பு சந்தோஷமாக மாறி உள்ளது. இந்த சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்றால் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் இலங்கை அணி வீரர்கள் அனைவரும் கேப்டன் சேஸிங் கிங்க்கு, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பரிசளிப்பார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here