T20 உலக கோப்பை: இந்திய அணியில் இடம்பெறும் 12 முக்கிய வீரர்கள்? – ஜடேஜாவுக்கு பதில் இவரா!!

0
T20 உலக கோப்பை: இந்திய அணியில் இடம்பெறும் 12 முக்கிய வீரர்கள்? - ஜடேஜாவுக்கு பதில் இவரா!!
T20 உலக கோப்பை: இந்திய அணியில் இடம்பெறும் 12 முக்கிய வீரர்கள்? - ஜடேஜாவுக்கு பதில் இவரா!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில் BCCI இன்னும் இந்திய அணியை அறிவிக்காத நிலையில் உத்தேச அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

உத்தேச இந்திய அணி பட்டியல்!!

ஆசியக் கோப்பையை தொடர்ந்து அடுத்ததாக அனைவரது பார்வையும் T20  உலக கோப்பை பக்கம் திரும்பி உள்ளது. அனைத்து நாடுகளும் T20  உலக கோப்பைக்கான அணியை வெளியிட்டு வரும் நிலையில் இந்தியா இது குறித்த எந்த முடிவையும் இன்னும் வெளியிடவில்லை. மேலும் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உலக கோப்பைக்கான அணி வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதனால் தற்போது ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட உத்தேச உலக கோப்பை இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

விக்கெட்ட மட்டும்மில்ல.. ரசிகர்களையும் வீழ்த்திடிங்க - T20 தொடரில் புவனேஷ் குமார் படைத்த புதிய சாதனை!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி பேட்டிங் வரிசையில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும் ஜடேஜா காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதில் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து பந்து வீச்சில் பும்ரா, புவனேஷ்வர் குமார், யுஜ்வேந்திர சஹால் ஆகியோர் மட்டும் தற்போது இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.


இவர்களை தவிர்த்து வேக பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.  மேலும் பேக் அப் வீரர்கள் பட்டியலில் ரவி பிஷ்னோய், அஸ்வின், குல்தீப் யாதவ் உள்ளனர். இவர்களை தவிர்த்து இன்னும் திறமையான வீரர்கள் அணியில் இருப்பதால் இவர்களில் யாரை BCCI இறுதி பட்டியலில் எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here