மிக்ஜாம் புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6000 நிவாரண தொகையாக நிர்ணயிப்பு…, தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!! 

0
மிக்ஜாம் புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6000 நிவாரண தொகை

தமிழகத்தின் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிவாரண தொகை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதாவது,

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண தொகையை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தியும் அறிவித்துள்ளார்.


நிவாரணத் தொகை உயர்வு பின்வருமாறு:

  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை ரூ 4 லட்சத்தில் இருந்து, ரூ. 5 லட்சம்
  • சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ 5 ஆயிரத்திலிருந்து, ரூ 8 ஆயிரம்
  • வல்லம் வகை படகுகளுக்கு ரூ. 75 ஆயிரத்திலிருந்து, ரூ. ஒரு லட்சம்
  • முற்றிலும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு ரூ. 5 லட்சத்தில் இருந்து, ரூ 7.50 லட்சம்
  •  சேதமடைந்த வலைகளுக்கு ரூ. 10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரம்
  •  முற்றிலும் சேதமடைந்த கட்டு மரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட) – ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரம்
  •  சேதமடைந்த கட்டு மரங்களுக்கு ரூ. 10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரம்
  • கால்நடைகளில் எருது, பசு உயிரிழப்பு நிவாரணம் ரூ.30,000-லிருந்து ரூ.37,500
  • வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணம் ரூ. 3,000/-லிருந்து ரூ.4,000
  • மழையால் பாதித்த மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410-லிருந்து, ரூ.8,500
  • நெற்பயிர் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூ 17,000
  • பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்ததால் (33%க்கு மேல்) ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ 18 ஆயிரத்திலிருந்து ரூ. 22,500-மாக உயர்த்தி அறிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மதிய உணவுத் திட்டத்திற்கான நிதியை குறைத்த மத்திய அரசு? இன்னும் ரூ.42.84 கோடி பாக்கி., அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட கேரளா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here