தமிழக பள்ளி மாணவர்களே குட் நியூஸ்…, உங்களுக்காகவே சிறப்பு ஏற்பாடு…, வெளியான முக்கிய அப்டேட்!!

0
தமிழக பள்ளி மாணவர்களே குட் நியூஸ்..., உங்களுக்காகவே சிறப்பு ஏற்பாடு..., வெளியான முக்கிய அப்டேட்!!
தமிழக பள்ளி மாணவர்களே குட் நியூஸ்..., உங்களுக்காகவே சிறப்பு ஏற்பாடு..., வெளியான முக்கிய அப்டேட்!!

தமிழக அரசானது, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக, பள்ளி வேலை நாட்களில் சீருடை அணிந்து இருந்தால் போதும் மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்து பள்ளிக்கு செல்லலாம் என அரசு அறிவித்திருந்தது. இதனால், தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த இலவச பேருந்து சேவையை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருமணம், அத்தியந்தல், நரியாப்பட்டு, மணலூர்பேட்டை, தேவனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கிராம பகுதிகளுக்கு வரும் பேருந்துகள் குறைவாக இருப்பதால், பள்ளி செல்லவும் வீடு திரும்பவும் நேரம் தாமதமாகி வருவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், சிரமமின்றி குறித்த நேரத்திற்குள் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும், வீடு திரும்பவதற்கும் ஏற்ற வகையில் கூடுதல் பேருந்துகளை பள்ளி வேலை நாட்களில் மட்டும் இயக்குமாறு போக்குவரத்து துறைக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TET தேர்வர்களுக்கு ஜாக்பாட்., அரசு பள்ளிகளில் 6,000 காலிப்பணியிடங்கள்., கல்வித்துறை அதிரடி எடுத்த முடிவு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here