பிறப்பு சான்றிதழ் பெற காலஅவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

0

வெளிநாடுவாழ் மக்களின் நலன் கருதியும், உயர் கல்விக்காக வெளிநாடு செல்பவர்கள் நலன் கருதியும் 1.1.2000ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழில் பெயர் பதிய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளித்து உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

பிறப்பு சான்றிதழ்

குழந்தையின் பெயரை பதிவு செய்ய பிறப்பு சான்றிதழ் பயன்படுகிறது, இதற்கு பிறப்பு/இறப்பு பதிவுச்சட்டம் வழிவகைசெய்கிறது. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெறலாம். பிறப்பு சான்றிதழ், குழந்தையை பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை,ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் போன்ற முக்கிய ஆவணங்கள் பெறவும், வயது குறித்த ஆதாரமாகவும் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்துகொள்ளலாம். 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரை, 15 ஆண்டுகளுக்குள் உரிய காலதாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.

திருத்தியமைக்கப்பட்ட பிறப்பு இறப்பு பதிவு விதிகளின் படி, 1.1.2000க்கு முன் பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு 2014ம் ஆண்டு வரை பெயரை சேர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அந்த அவகாசம் போதுமானதாக இல்லாத நிலையில் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கப்பட்டது.

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி 2020 – ஆன்லைன் முன்பதிவு துவக்கம்!!

இந்த கால அவகாசம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்தது. இதனால் மக்கள் பெயர் சேர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். வெளிநாடுவாழ் மக்களின் நலன் கருதியும், உயர் கல்விக்காக வெளிநாடு செல்பவர்கள் நலன் கருதியும் இந்திய தலைமைப்பதிவாளர் மேலும் 5 ஆண்டு அவகாசம் வழங்கியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெயர் பதிவு செய்ய கிராம ஊராட்சியாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலர் அல்லது துப்புரவு ஆய்வாளரிடமும், நகராட்சி – மாநகராட்சிகளில் துப்புரவு ஆய்வாளரிடமும், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றின் சுகாதார ஆய்வாளரிடமும் விண்ணப்பிக்கலாம். மேலும் தற்போது வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்றார். ஒருமுறை பெயர் பதிவு செய்யப்பட்டால் அதை மற்ற இயலாது எனவே பெயரை உறுதியாக முடிவு செய்தபின் சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here