குண்டர் சட்டத்தின் கீழ் கைதான டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா – சுற்றி வளைத்து பிடித்த சைபர் கிரைம் போலீசார்!!!!

0
rowdy baby surya
rowdy baby surya

சமூக வலைத்தளத்தில் பிரபலமாக சுற்றி வந்த ரவுடி பேபி சூர்யாவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

ரவுடி பேபி சூர்யா:

டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெற்ற ரவுடி பேபி சூர்யா தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆரம்பத்தில் ஆபாசமாக டிக்டாக் செய்து இணையத்தில் வெளியிட்டு அதனால் பல பிரச்சனைகளை சந்தித்தார்.

டிக்டாக் செயலி முடக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனலில் அவ்வப்போது ஆபாச வார்த்தைகளை பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்த வீடியோக்கள் பார்ப்பவர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தும் கோணத்தில் இருக்கும்.

மேலும் இவ்வாறு ரீல்ஸ் செய்யும் போது கவர்ச்சி எல்லை மீறியதால் கமெண்ட்களும் எல்லை மீறி மோசமாக வர ஆரம்பித்தது. ஜி.பி முத்து பின்னால் சுற்றி வந்த ரௌடி பேபி சூர்யா தற்போது சிக்கா என்கிற சிக்கந்தருடன் சுற்றி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் இவரின் எல்லை மீறிய செயலை முறியடிக்க கோவையில் அவரின் மேல் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில், கோவை சைபர் கிரைம் போலீசார் அவரையும் அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தரையும் சென்ற மாதம் கைது செய்துள்ளனர்.மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பெயரில் இவர்களின் மேல் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here