இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட தயார் – டிக் டாக் நிறுவனம்..!

0

டிக் டாக் நிறுவனம் இந்தியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உத்தரவு..!

india ban 59 chines app
india ban 59 chines app

லடாக் எல்லையில் நடந்த மோதலையடுத்து இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழ்நிலையில் இந்தியாவில் தொழில்நுட்ப துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் சீன நாட்டு நிறுவனங்கள் ‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து. இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலி அதிகாரப்பூர்வமாக இன்று நீக்கப்பட்டது.

டிக் டாக் நிறுவனத்தின் இந்திய பிரிவு..!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களைக் கொண்ட டிக் டாக், ஹலோ போன்ற செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இந்தியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும், இந்திய பயனாளர்களின் எந்த ஒரு தரவுகளையும் நாங்கள் சீனா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் பகிர்ந்து கொள்வது கிடையாது. கோரிக்கை வரும் பட்சத்தில் வரும் காலத்தில் இதே அணுகுமுறையை பின்பற்ற தயாராக இருக்கிறோம். தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள் மரியாதைக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிப்போம் என்று தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here