சாத்தான்குளம் தந்தை & மகனை விடிய விடிய லத்தியால் அடித்த கொடூரம் – மாஜிஸ்திரேட் அறிக்கையில் அம்பலம்..!

1
Jeyaraj & Penniks
Jeyaraj & Penniks

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கிளைச்சிறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது குறித்து விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் அளித்துள்ள அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தந்தை, மகன் மரணம்:

கோவில்பட்டி சாத்தான்குளத்தில், அரசு அனுமதித்த நேரத்தை விட அதிகமாக கடையை திறந்து வைத்திருந்த காரணத்தால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசார் தாக்கியதால் தான் இருவரும் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Sathankulam Police
Sathankulam Police

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நேரில் விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனை காவலர் ,மகாராஜன், ‘உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது’ என தரக்குறைவாக பேசி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மிரட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அளித்துள்ள அறிக்கையில், தந்தை மற்றும் மகனை காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலமாகி உள்ளது.

Madurai High court
Madurai High court

இதற்கு தாக்க பயன்படுத்தப்பட்ட லத்திகளை கேட்ட பொழுது அதனை கொடுக்க காவல்துறையினர் மறுத்ததாக மாஜிஸ்திரேட் தெரிவித்து உள்ளார். மாஜிஸ்திரேட் வலுக்கட்டாயமாக கேட்ட பொழுதே லத்தியை வழங்கி உள்ளனர். மேலும் காவலர் மகாராஜன் தனது லத்தியை கொடுக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். காவல்நிலைய டேபிள் மற்றும் லத்தியை ரத்தக் கறை இருந்துள்ளது. அக்காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் சாட்சி தெரிவித்த பொழுது அவரை மிரட்டும் தோணியில் மற்ற காவலர்கள் செயல்ப்பட்டு உள்ளனர்.

சீனாவிலேயே கொரோனவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு – ராணுவத்தில் பயன்படுத்த ஒப்புதல்..!

அதிர்ச்சி அளிக்கும் தகவலாக தந்தை, மகன் தாக்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு உள்ளது. இதில் கொலை வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உள்ளது. மேலும் சாட்சியங்களை அழித்து விடலாம் என்பதால் விரைந்து விசாரணையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here