காக்கா முட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் கடைசி விவசாயி. விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் இப்படம் 2 தேசிய விருதை வென்று இருந்தது. இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
தற்போது இது தொடர்பாக ஓர் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது தேசிய விருதை திருடிய கும்பல் ‘ஐயா எங்களை மன்னித்து விடுங்கள்’, ‘உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என்று எழுதி அவரது வீட்டு வாசலில் நேற்று (பிப்ரவரி 12) இரவு வைத்து சென்றுள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் வயிற்றுக்காக கொள்ளையடிப்பவர்கள் போல என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.