தமிழக சட்டப்பேரவை 2024: எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு நொடி பொழுதில் பதிலளித்த அமைச்சர்…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழக சட்டப்பேரவை 2024: எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு நொடி பொழுதில் பதிலளித்த அமைச்சர்..., முழு விவரம் உள்ளே!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முதல் (பிப்ரவரி 12) தொடங்கி உள்ளனர். இந்த கூட்டத்தொடரின் 2 ம் நாளான இன்று (பிப்ரவரி 13) கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் ,ஆளுநர் உரை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமியின் கேள்விக்கு, நீர்வளத்துறை அமைச்சர் அதிரடியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதாவது எடப்பாடி பழனிசாமி அவர்கள், “சேலம் மாவட்டம் 4 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்கரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றி மூலமாக நீர் சேர்க்கும் திட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார். ஆனால் இந்த பணி இப்போது சுணக்கமாக நடைபெற்று வருகிறது. மாண்பு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் கூட நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்கள். வேகமாக, துரிதமாக நிறைவேற்ற இந்த அரசு முன்னுரிமை தர வேண்டும்.” என்று தெரிவித்தார். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு மாண்புமிகு அமைச்சர் என்று கூறியதும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், “வேகமாக, துரிதமாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தனது ஒரு நிமிடம் கூட முடியாத நிலையில் பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here