பிப்.26க்குள் 8 நாட்கள் விடுமுறை? அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
பிப்.26க்குள் 8 நாட்கள் விடுமுறை? அதிகாரபூர்வ அறிவிப்பு!!
நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு, வார இறுதி நாட்கள் மட்டுமல்லாமல் பண்டிகை உள்ளிட்ட தினங்களிலும் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நாட்களில் UPI பரிவர்த்தனை உள்பட ஆன்லைன் சேவைகள் செயல்பட்டாலும், வங்கி தொடர்பான பல வேலைகள் தடைபடுகிறது. இதனால் முன்கூட்டியே வங்கி விடுமுறை நாட்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 14 முதல் 26ஆம் தேதி வரையிலும், பல்வேறு மாநிலங்களுக்கான வங்கி விடுமுறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநிலங்கள் வாரியாக வங்கி விடுமுறை பட்டியல்:

14 பிப்ரவரி 2024- பசந்த பஞ்சமி (அ) சரஸ்வதி பூஜை (ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா)

15 பிப்ரவரி 2024- லுய்-ங்காய்-நி (மணிப்பூர்)

18 பிப்ரவரி 2024- ஞாயிற்றுக்கிழமை (நாடு முழுவதும்)

19 பிப்ரவரி 2024- சத்ரபதி சிவாஜி ஜெயந்தி (மகாராஷ்டிரா)

20 பிப்ரவரி 2024- மாநில தினம் (அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம்)

24 பிப்ரவரி 2024- 4வது சனிக்கிழமை (நாடு முழுவதும்)

25 பிப்ரவரி 2024- ஞாயிற்றுக்கிழமை (நாடு முழுவதும்)

26 பிப்ரவரி 2024- நியோகம் (அருணாச்சல பிரதேசம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here