அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள்., இத்தனை பேர்கள்? திடுக்கிடும் தகவல்!!!

0
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெறும் விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டு வருகிறது. மேலும் அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்கு சில தகுதிகளும் உள்ளது. அதன்படி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் நிரந்தர குடியிருப்பாளராக அமெரிக்காவில் வசிக்க வேண்டும். மேலும் அமெரிக்காவில் மனைவியுடன் வசிப்பது அல்லது இராணுவ சேவையில் இருப்பது போன்றவையும் குடியுரிமை வழங்குவதற்கான தகுதிகளாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு குடியுரிமை பெற்றவர்களின் விபரத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி குடியுரிமை பெற்றவர்களில் இந்தியர்கள் 2வது இடத்திலும், மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. அதாவது மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மெக்சிகோவை சேர்ந்தவர்கள். அதேபோன்று இந்தியாவை சேர்ந்த 59 ஆயிரத்து 100 பேர் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

அனல் பறக்கும் TVK அரசியல் களம்., விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு இதுதான்., லீக்கான முக்கிய அப்டேட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here