ரேஷன் கடைகளில் இனி இந்த இரு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
ரேஷன் கடைகளில் இனி இந்த இரு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்..., வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஏழை எளிய மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை மானிய விலைக்கு அரசானது வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரிசி, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு அதிகமாக இருப்பதால், மண்ணெண்ணெயின் அளவை படிப்படியாக குறைத்து மத்திய அரசு வழங்கி வருகிறது. அதாவது, கடந்த 2006 ல் 59,852 கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெயின் அளவை மத்திய அரசு ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முதல் 7536 கி. லி., 2022 ல் 4520 கி. லி. என படிப்படியாக குறைந்து தற்போது, 2712 கிலோ லிட்டர் மட்டுமே மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெயானது குறைந்த அளவை விநியோகிக்கப்படுகிறது.

அடக்கடவுளே.,” பாக்கியலட்சுமி” கோபிக்கா இந்த நிலைமை?., இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ!!

இந்த மண்ணெண்ணெய் எதிர்பார்த்து இருக்கும் கிராமப்புற மக்களுக்கு 5 மாதத்திற்கு ஒரு முறையே ஒரு லிட்டர் வழங்கப்படுகிறது. இதே நிலையே, தொடர்ந்தால் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலை கூட ஏற்படுமோ என பொது மக்கள் அஞ்சுகின்றனர். இதனால், மத்திய அரசு முறையாக தமிழகத்திற்கு மண்ணெண்ணெய்யை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், கோதுமையின் பற்றாக்குறையும் தமிழகத்தில் நிலவி வருவதால், இனி வரும் காலங்களில் ரேஷன் கடைகளில் இந்த இரு பொருட்கள் நிலையாக கிடைக்குமா?? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here