சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்., அரசுக்கு கோரிக்கை., சென்னை போக்குவரத்து பாதிப்பு !!

0
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்., அரசுக்கு கோரிக்கை., சென்னை போக்குவரத்து பாதிப்பு !!
தமிழக அரசின் வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 4 சதவீதத்தில் 1 சதவீதத்தை முற்றிலுமாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என  9 அம்ச கொள்கையுடன் கூடிய கோரிக்கைகளை  அரசுக்கு  விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி  பார்வையற்ற மாற்றுத்திறனாளி  நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்  இன்று 2 ஆவது நாளாக வேப்பேரி பகுதியில் சாலையில் மறியல் செய்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தும் செயலில் போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here