நீதிமன்ற காவலில் TTF., ஜாமீன் மனு தள்ளுபடி.,  நீதிமன்றம் பிறப்பித்த கெடுபிடி உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
நீதிமன்ற காவலில் TTF., ஜாமீன் மனு தள்ளுபடி.,  நீதிமன்றம் பிறப்பித்த கெடுபிடி உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!
விலையுயர்ந்த வாகனங்களை வேகமாக ஓட்டி அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருபவர் தான் TTF வாசன். இதன் மூலம் இவருக்கு சோசியல் மீடியாவில் நல்ல ரீச் கிடைத்தது. மேலும் தற்போது இவர்  ”மஞ்சள் வீரன்” என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி இருக்க கடந்த மாதம் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் என்ற பகுதியில் பைக்கை விரைவாக ஓட்டி சாகசம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வாகனத்தை விரைவாக ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்துதல் செய்தல் போன்ற சில காரணங்களுக்காக  போலீஸ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர் இன்று வரை நீதிமன்ற காவலில் இருந்து வந்தார். இதற்கிடையில் TTF சார்பில் ஜாமீன் கேட்டு 2 முறை கொடுத்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில்  காஞ்சிபுரம் நீதிமன்றம் இன்னும் 15 நாட்கள் இவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here