இதுவரை இல்லாத புது ரோலில் விஜய் – லோகேஷ் போட்ட அதிரடி பிளான்! சூடுபிடிக்கும் தளபதி 67 அப்டேட்!!

0
இதுவரை இல்லாத புது ரோலில் விஜய் - லோகேஷ் போட்ட அதிரடி பிளான்! சூடுபிடிக்கும் தளபதி 67 அப்டேட்!!

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தின் அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 தளபதி 67  :

நடிகர் விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய், அடுத்ததாக தளபதி 67 என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவார் என  பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது குறித்த அதிரடி அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் விஜய், தன்னுடைய தற்போதைய வயதில் அப்படியே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்துள்ள, இயக்குனர் லோகேஷ் அடுத்ததாக தளபதி 67 படத்தில் இணைய உள்ளதால், விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here