குறி வச்சா.., இறை விழுந்தே ஆகணும்.., சும்மா வேட்டையனாக கலக்கும் சூப்பர் ஸ்டார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
சும்மா வேட்டையனாக கலக்கும் சூப்பர் ஸ்டார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
குறிப்பாக இப்படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தலைவர் 170 படக்குழு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது டி.ஜே.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்திற்கு “வேட்டையன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here