எலான் மஸ்க் எடுத்த பரபரப்பு முடிவு.. அடுத்து அதைத்தான் வாங்க போறேன் – தீயாய் பரவும் சமூகவலைத்தள பதிவு!

0
எலான் மஸ்க் எடுத்த பரபரப்பு முடிவு.. அடுத்து அதைத்தான் வாங்க போறேன் - தீயாய் பரவும் சமூகவலைத்தள பதிவு!

டெல்சா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் இங்கிலாந்தின் மான்செஸ்டர் கால்பந்து அணியை வாங்க போவதாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க்:

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். இவர் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருந்ததாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் சில பல காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு ஒன்றையும் ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்தது.

இதனை தொடர்ந்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டை பகிர்ந்துள்ளார். இந்த தகவலால் டிவிட்டர் வாசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதாவது, ட்விட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, எலான் மஸ்க் தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்கப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பதிவிட்டை சில நெட்டிசன்கள் இது போன்ற அதிரடி ட்வீட்களை பதிவிடுவது எலான் மஸ்க்கின் வழக்கம் என்ற கருத்தை முன் வைத்து வருகிறார்கள். மேலும் சில நெட்டிசன்கள் வாங்குவாரா இல்லையா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here