தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 20 ‘இந்த’ பகுதிகளுக்கு மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 20 'இந்த' பகுதிகளுக்கு மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 20 'இந்த' பகுதிகளுக்கு மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 20 ‘இந்த’ பகுதிகளுக்கு மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடி கோட்டத்தில் அமைந்துள்ள உப மின் நிலையத்தில் வருகிற (ஆகஸ்ட் 20) மாதாந்திர பணியின் நிமித்தம் மின்தடை செய்யவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் இரா.கண்ணன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின்தடை :

மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமாகும் அபாயம் உண்டாகும். இதனை தவிர்ப்பதற்காகவே தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் முன்னரே சென்று விடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவ்விதமாக வருகிற சனிக்கிழமை (ஆக.20) அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்க இருக்கிறது. இப்பணியின் போது மின் பாதைகளில் இருக்கும் பழுதை நீக்கவும், மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ளப்படும். அப்போது மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே, பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்குமாறு மின்வாரிய செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் வருகிற (ஆக.20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் அருப்புக்கோட்டை நகர், பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி பஞ்சாலை, வெம்பூா், தமிழ்ப்பாடி, இலுப்பையூர், திருச்சுவி, பனையூா், ஆனைக்குளம், பந்தல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here