டாஸ்மாக் பார் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி – குஷியில் குடிமகன்கள்!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பார்கள் தற்போது 9 மாதங்களுக்கு பின் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

டாஸ்மாக் பார்:

தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில்கள் முடங்கின மற்றும் மக்கள் அனைவரும் துன்பப்பட்டு வந்தனர். மேலும் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதியில் பார்கள் அனைத்தும் மூடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்து வருவதால் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. மேலும் 2 மாதங்களுக்கு முன்பே டாஸ்மாக் கடைகள் மட்டும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் மதுபிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பார்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் பார் உரிமையாளர்கள் மற்றும் அங்கு வேலை செய்யும் உறுப்பினர்கள் மிகவும் துன்பப்பட்டன. தற்போது டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பார் உரிமையாளர்கள் மற்றும் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பார் திறப்பதற்கான கட்டுப்பாடுகள்:

  • பார்களுக்கு மது அருந்த வருபவர்கள் தங்களது அலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை கொடுக்கவேண்டும்.
  • பாருக்குள் இருக்கும் போது தும்மல் அல்லது இருமல் ஏற்பட்டால் கட்டாயமாக டிஸ்ஸு காகிதம் அல்லது கைக்குட்டை பயன்படுத்துவது அவசியம்.
  • சமூக இடைவெளியை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
TASMAC bar
TASMAC bar
  • பார்களின் நுழைவாயிலில் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யவேண்டும்.
  • கிருமி நாசினிகள் கட்டாயமாக உபயோகப்படுத்த வேண்டும்.
  • பார்களில் வயதான ஊழியர்கள் அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது.
  • மேலும் ஏசி வசதிகள் உள்ள பார்களில் 50 சதவீதம் இயற்கை காற்று உள்ளே செல்வதற்கான அமைப்பு இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here