பள்ளி மாற்றுச் சான்றிதழை காண்பித்து இ பாஸ் பெறலாம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் பெரும் நடைமுறை அமலில் உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கை பணிகளுக்கு வெளியூர் செல்ல தங்களது மாற்றுச் சான்றிதழை (Transfer Certificate) காண்பித்து இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் திறக்கப்படும் பள்ளிகள் இந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதம் ஆகியும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பது சாத்தியமில்லை என மத்திய உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

tn e pass
tn e pass

தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் ஏற்கனவே மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்கி விட்டன. இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் குறையும் என ஆசிரியர்கள் கூறிய நிலையில், வரும் 17ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

“தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி” – அதிமுக கடும் அதிருப்தி!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அனைத்து பள்ளிகளிலும் 17ம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என கூறினார். மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எவ்வித மதிப்பெண் குளறுபடிகளும் ஏற்படவில்லை எனவும், மாணவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழை காண்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here