தமிழகத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியா??  சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!!

0

நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த ஏழு நபர்களில் ஒருவருக்கு உருமாறிய ஓமைக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அவரது மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

தொற்று பாதிப்பு :

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில்,முதல் முறையாக கர்நாடகாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இன்று,மட்டும் டெல்லியில் நான்கு பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்,நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த  நபர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப் பட்டுள்ளது.

அவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு,பெங்களூரு மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முடிவுகள் தெரிய வரும் என சொல்லப்பட்டுள்ளது. அந்த ஏழு நபர்களும்,சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here