தமிழக பெண்களுக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிமுகம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

0
stalin

திருத்தணியில் நடைபெற்ற  அரசு நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்,தமிழக பெண்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

முதல்வர் உறுதி :

மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பெண்களுக்கு 3 ஆயிரம் கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருத்தணியில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் இன்று துவக்கி வைத்தார். இது குறித்து அவர் பேசிய போது,பெண்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டதே மகளிர் சுய உதவி குழு என்றும்,இந்த மகத்தான திட்டத்தை துவக்கி வைத்தது நம் முன்னாள் முதல்வர் கலைஞர் என புகழாரம் சூட்டினார். மேலும்,தற்போது இங்கு துவக்கி வைக்கப்பட்டுள்ள திட்டத்தின் வாயிலாக 10 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 7.56 லட்சம் பெண்கள் 2749 கோடி ரூபாய் கடன் பெற்று முன்னேற்றம் அடைவர் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும்,தமிழ்நாட்டில் இதுவரை 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு,1 கோடியே 6 லட்சம் மகளிர் உறுப்பினராக பயன்பெற்று வருகின்றனர் எனவும்,படிப்படியாக வாக்குறுதியில் சொல்லப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,அங்கு அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழு கண்காட்சியையும் பார்வையிட்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here