தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா?? – அமைச்சர் புதிய விளக்கம்!!

0

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகள்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் உள்ளிட்ட மதுரையை சுற்றிய ஊர்களில் நடக்கும் இந்த போட்டிகளை காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர். அதிலும், குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்றது. தமிழகத்தில் தற்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பித்து விட்டதாகவும், அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் மட்டும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள் கண்டிப்பாக போர்க்கால அடிப்படையில் நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here