தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ல் திறக்கப்படும்? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!!

0
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ல் திறக்கப்படும்? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!!
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ல் திறக்கப்படும்? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறவே மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் மாணவ குழந்தைகள் மிகவும் சிரமப்படுவார்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருந்தாலும் குறிப்பிட்ட தேதியில், அதாவது 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு பள்ளி குழந்தைகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மக்களே உஷார்., கொரோனாவை தொடர்ந்து பரவும் கொடிய வைரஸ்., மீண்டும் ஊரடங்கு ?? WHO எச்சரிக்கை!!!

அதற்கு பதிலளித்த அமைச்சர், “ஏற்கனவே பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்திய வானிலை அறிக்கை தகவலின் படி பள்ளி திறப்பதற்குள் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என நம்புகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here