திருமணத்திற்கு ஒரே ஒரு இ-பதிவு போதும் – புதிய வழிமுறையை அறிவித்த தமிழக அரசு!!

0
tn e pass
tn e pass

தமிழகத்தில் தற்போது ஊரடங்கின் எதிரொலியாக இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை முன்னிட்டு தற்போது இதுகுறித்து புதிய வழிமுறை ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ-பதிவு:

தமிழகத்தில் கடுமையாக காணப்பட்டு வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மேலும் இந்த ஊரடங்கில் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிக்கப்பட்டும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தினால் ஊரடங்கு நடவடிக்கை கடுமையாக்கப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல வேண்டும் என்றால் இ-பதிவு கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இ-பதிவில் திருமணம் என்ற பெயரில் சிலர் போலியான பதிவை பதிவிட்டு வெளியே சுற்றித்திரிவதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் அரசு மேலும் ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி இனி திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு இ-பதிவு போதும் என்று தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழக அரசின் இ - பதிவு இணையத்தில் திருமணம் என்ற பிரிவு சேர்ப்பு !!!

கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் அறிவுரை!!

அதாவது திருமண நிகழ்ச்சிக்கு வரப்போகும் அனைவருக்கும் ஒரே இ-பதிவு தான் என்றும் இதனை திருமண பத்திரிகையில் பெயர் இருப்பவர் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ- பதிவில் திருமண பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சிக்கு வரும் அனைவரின் போன் நம்பர் மற்றும் ஆதார் அல்லது பான் கார்டு போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here