கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் அறிவுரை!!

0

கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிக்கைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை:

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டவது அலை மக்களிடையே மிக அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களும் மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருந்தும் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்த பாடில்லை. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சற்று சர்ச்சையை கிளப்பும் வகையில் கருத்தை தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அவர் கூறியதாவது, சிங்கப்பூரில் தற்போது கொரோனாவின் புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது குழந்தைகளை அதிகமாக பாதிக்கும். எனவே இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையேயான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு சிங்கப்பூர் அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

3 மாதங்களுக்கு பின்பே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு அதிரடி!!

தற்போது மேலும் கொரோனாவின் மூன்றாவது அலை குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனாவின் மூன்றாவது அலை வந்தால் அதனை சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், இன்று இதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார் அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here