தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி – முதல்வர் ஸ்டாலின் ட்விட் !!! –

0

மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக இன்று  அதிகாலை 3 மணியளவில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியானதை அடுத்து தேமுதிக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கட்சி சார்பில் அறிவித்தனர். மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் கூறினர்.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்; “அதில் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் விஜயகாந்த் விரைவில் முழு உடல் நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here